News October 25, 2024
UP அணியை வீழ்த்திய பெங்கால்

ப்ரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியர்ஸ் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், UP யோத்தாஸ் அணியை BW எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் BW அணி, 32-29 என்ற புள்ளிகள் கணக்கில் UPY அணியை வீழ்த்தியது. குறிப்பாக ஆல் அவுட் புள்ளிகள் 2, எக்ஸ்ட்ரா பாயிண்ட்ஸ் 1 புள்ளி பெற்றது BW அணியின் வெற்றிக்கு உதவியது.
Similar News
News January 12, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 578 ▶குறள்: கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு. ▶பொருள்:கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.
News January 12, 2026
இந்தியாவுக்கு அடுத்த பின்னடைவு.. சுந்தர் OUT!

NZ-க்கு எதிரான நேற்றைய முதல் ODI-ல் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டது. 20-வது ஓவர் வீசிய போது காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறிய அவர், பேட்டிங் செய்யும் போதும் ரன் ஓட முடியாமல் திணறினார். இந்நிலையில், மீதமுள்ள 2 போட்டிகளில் இருந்தும் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, காயம் காரணமாக <<18824015>>பண்ட்<<>> விடுவிக்கப்பட்டார்.
News January 12, 2026
இந்தியாவை பாதுகாக்கும் அரண் PM மோடி: அம்பானி

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையிலும், நம்மை பாதுகாக்கும் ஒரு அரணாக PM மோடி இருப்பதாக அம்பானி தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியா வரலாற்றில் இத்தகைய ஒரு தன்னம்பிக்கையையும், ஆற்றலையும் முன்னெப்போதும் பார்த்ததில்லை. அடுத்த 50 ஆண்டுகளுக்கான இந்தியாவின் பாதையை அவர் வடிவமைத்துள்ளார். மோடி சகாப்தத்தை வரலாறு பதிவு செய்யும் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.


