News October 4, 2025

தினமும் தலைகீழாக நிற்பதால் கிடைக்கும் பலன்கள்

image

தலைகீழாக நிற்பதை யோக கலையில் சிரசாசனம் என்று அழைக்கின்றனர். இந்த சிரசாசனம் தினமும் செய்வதால், இரத்த ஓட்டம் மேம்படுவதுடன், உடலுக்கும், மனதுக்கும் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சில நன்மைகள் உள்ளன. அவை என்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில், இல்லாத நன்மைகள் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News October 4, 2025

286 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளேர் செய்த இந்தியா!

image

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 448/5 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது. முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 3-ம் நாள் ஆட்டமான இன்று, விரைவாக விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது இந்தியா. ஜடேஜா 104*, சுந்தர் 9* ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

News October 4, 2025

முடங்கிப் போன நாசா; 15,000 பேர் வேலையிழந்தனர்

image

செலவினங்களுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால் <<17883569>>அமெரிக்கா ஷட் டவுன்<<>> ஆனது. இதன் காரணமாக US விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பணிகளும் முடங்கியுள்ளன. அங்குள்ள 15 ஆயிரம் பேர் வரை வேலையிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் Artemis Moon மிஷன் தவிர, மற்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 4, 2025

கரூர் துயரம்: கைது செய்ய விரைந்தது போலீஸ்

image

கரூர் துயரம் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவில் நாமக்கல் SP விமலா, SP ஷியாமளா தேவியை இணைத்துக்கொள்ள ஐ.ஜி. அஸ்ரா கர்க்குக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில், ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஆனந்த், நிர்மல் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க சேலம், நாமக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் தனிப்படை வலைவீசி தேடி வந்தது. இந்நிலையில், அவர்களை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!