News August 7, 2024
10 மணிக்குள் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

இரவு 10 -11 மணிக்குள் தூங்குவதால் இதயம் மற்றும் அது சார்ந்த நோய் அபாயங்கள் குறைவதாக ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல் நடத்திய ஆய்வு கூறுகிறது. தினமும் 8-9 மணி நேரம் உறக்கம் பெற வாய்ப்புள்ளதால், உடல் முழுமையாக ஓய்வெடுக்க வழிவகுக்கிறது. ஹார்மோன்களில் சமநிலை ஏற்படுவதால், வேலையில் செயல்திறன் அதிகரிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் நல்ல வலுப்பெறுவதால், உடல் முழுமையான ஆரோக்யம் பெறுகிறது.
Similar News
News December 29, 2025
SK-வுடன் விஜய் ஆண்டனி இணைகிறாரா?

சிவகார்த்திகேயனின் 26-வது படத்தை பிரமாண்டமாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனியை நடிக்க வைக்க வெங்கட் பிரபு ஆசைப்பட்டுள்ளார். ஆனால், சம்பள விவகாரம் காரணமாக அந்த பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேறு முன்னணி ஹீரோவை படக்குழு தேடி வருகிறதாம்.
News December 29, 2025
BREAKING: விலை ₹5,000 வரை குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

புத்தாண்டையொட்டி விமான பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது, உள்நாட்டு பயணங்களுக்கு ₹1,950, வெளிநாட்டு பயணங்களுக்கு ₹5,355 வரை டிக்கெட் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.1-ம் தேதி வரை இந்த சலுகை அமலில் இருக்கும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தளத்தில் சலுகையுடன் டிக்கெட்டை புக் செய்து கொள்ளலாம். உடனே முந்துங்கள்!
News December 29, 2025
விரைவில் சென்னைக்கு வருகிறது IKEA

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பன்னாட்டு ஃபர்னிச்சர் நிறுவனம் தான் IKEA. ஏற்கெனவே இந்தியாவில் ஹைதராபாத், மும்பை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இதன் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்நிறுவனம் சென்னையில் தன்னுடைய கடையை திறக்க முடிவு செய்துள்ளது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உற்பத்தி என சென்னை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், IKEA-வின் வருகை ஃபர்னிச்சர் துறையில் மிகப்பெரிய சர்வதேச முதலீடாக அமையும்.


