News April 29, 2025
காலையில் தியானம் செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!

காலையில் விழிப்பதே நிறைய பேருக்கு பிரச்னை. அப்படி விழித்து தியானம் செய்தால் பல நன்மைகள் கிடைக்குமாம். மன அழுத்தத்தை குறைத்து பதட்டத்தை கட்டுப்படுத்த தியானம் உதவுகிறது. விழிப்புணர்வு திறனை மேம்படுத்தி, கவனத்தை அதிகப்படுத்துகிறது. நினைவக இழப்பின் அபாயத்தை தியானம் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT
Similar News
News April 29, 2025
செப்.6-ம் தேதி காவலர் நாள்: CM ஸ்டாலின்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு அந்த நாளில் பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காட்சி நடத்தப்படும் என தெரிவித்த ஸ்டாலின், குற்றச் சம்பவத்தை பூஜ்ஜியமாக்க காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தினார்.
News April 29, 2025
இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
News April 29, 2025
மேலே பாம்பு.. கீழே நரி.. மத்திய அரசை தாக்கிய CM ஸ்டாலின்!

மேலே பாம்பு.. கீழே நரி.. விழுந்தால் அகழி, இதற்கு இடையில் மாட்டியவர் போல மத்திய அரசு, ஆளுநர், நிதி நெருக்கடிக்கு இடையே சாதனை செய்கிறோம் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீராக, அமைதியாக இருப்பதால் இங்கு சாதி, மத வன்முறை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கலவரத்தை தூண்ட சிலர் நினைத்தாலும் மக்கள் அதனை முறியடித்து விடுகிறார்கள் என்றும் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.