News May 4, 2024
மாலையில் விளக்கேற்றுவதால் வரும் நன்மை

விளக்கில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. தினமும் மாலை 6 மணி அளவில் (சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு) வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலமிட வேண்டும். அதன் பின்னர், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகிய மூன்றையும் கலந்து தீபம் ஏற்றி, திருவிளக்கு மந்திரம் பாடி, பால் நிவேதனம் செய்து வழிபட திருமணத்தடை, சுபகாரியத்தடை, கல்வித்தடை நீங்குவதோடு சர்வ மங்கலமும் உண்டாகும் என்பது ஐதீகம்.
Similar News
News January 31, 2026
பண மழையில் நனையும் 3 ராசிகள்

வரும் ஏப்ரலில் சனி பகவான் மீன ராசியில் உதயமாக இருப்பதால், 3 ராசியினருக்கு வாழ்க்கை சிறப்பாக அமையும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, *ரிஷபம்: பண ஆதாயம் கிடைத்து வருமானம் உயரும். புதிய முதலீடுகள் லாபம் தரும். *மிதுனம்: தொழிலில் உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலையில் சம்பள உயர்வு பெறலாம். குடும்ப உறவுகளில் நிலவிய பிரச்னை அகலும். *மகரம்: நீண்ட நாள்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப வரும்.
News January 31, 2026
இனி இதை முகத்தில் தடவ வேண்டாம்..!

கண்ட கண்ட பியூட்டி ஹேக்ஸ் வீடியோக்களை பார்த்துவிட்டு முகத்தில் எலுமிச்சையை தடவுறீங்களா? இதனால் உங்கள் சருமத்துக்கு பாதிப்பே. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் அதிகமாக இருப்பதால் அது உங்கள் சருமத்தை மேலும் எரிச்சலடைய செய்கிறது. சருமம் முற்றிலுமாக சேதமடைந்து, முகப்பருக்கள் அதிகரிக்குமே தவிர குறையாது. விழிப்புணர்வுக்காக SHARE THIS.
News January 31, 2026
ஆசிரியர்கள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி ஒரு மாதத்திற்கு மேல் இடைநிலை ஆசியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், ஊதிய முரண்பாட்டை சரி செய்ய அமைக்கப்பட்ட மூவர் குழு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்த நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


