News October 2, 2025
உட்கட்டாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

உட்கட்டாசனம் செய்வதால், கால்களுக்கு வலிமை கிடைக்கும். நரம்பு மண்டலம் சீராக இயங்கும். ஒரு நிமிடம் செய்தால் 4 கி.மீ., தூரம் நடந்த பலன் கிடைக்கும் *முதலில் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும் *அடுத்து கைகளை நேராக தோள்பட்டை அளவிற்கு முன்னே நீட்டி, நாற்காலியின் மீது அமர்வது போல் உட்கார வேண்டும் *முதுகெலும்பு 90 டிகிரியில் இருக்க வேண்டும் *30 வினாடிகள் வரை இந்த நிலையில் இருக்கவும். SHARE.
Similar News
News October 2, 2025
இந்திய அணியின் பிளேயிங் 11

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா 3 ஸ்பின்னர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. காயத்தில் இருந்து மீண்ட நிதிஷ் ரெட்டி அணிக்கு திரும்பியுள்ளார். இந்தியா பிளேயிங் 11 : கில், ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.
News October 2, 2025
BREAKING: தங்கம் விலை சரசரவென குறைந்தது

வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹70 குறைந்து ₹10,880-க்கும், சவரனுக்கு ₹560 குறைந்து ₹87,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 10 நாள்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News October 2, 2025
காமராஜர் கட்டிய முக்கிய அணைகள்

காமராஜரின் 50-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சில முக்கிய அணைகளை தெரிந்துகொள்வோம். அவர் 1954 முதல் 1963 வரை CM ஆக இருந்த போது, விவசாயத்திற்காக கட்டப்பட்ட அணைகள், 60 ஆண்டுகள் ஆகியும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக, 1955-ல் பாலக்காடு மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த போது, மலம்புழாவில் புதிய அணையை கட்டினார். SWIPE செய்து பார்க்கவும்.