News September 28, 2025
பச்சிமோத்தாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!

பச்சிமோத்தாசனம் செய்வதால் உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். படபடப்பு, டென்சன் நீங்கி மன அமைதி உண்டாகும். இதனை செய்ய முதலில், கால்களை நேராக நீட்டி உட்காரவும். அடுத்து முன்னோக்கி குனியுங்கள். இரு கால் கட்டை விரல்களையும் கொக்கி போல் பிடித்துக்கொண்டு, நெற்றியால் கால் முட்டிகளை தொட வேண்டும். இதே நிலையில் இருந்துகொண்டு 1-10 வரை எண்ணவும். பின்னர் ரிலாக்ஸ் செய்யவும்.
Similar News
News January 6, 2026
தவெகவால் எந்த தாக்கமும் இல்லை: சசிகாந்த் செந்தில்

தவெகவால் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என MP சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார். குறைந்த சதவீத வாக்குகளையே அவர்களால் பெற முடியும் என்ற அவர், தங்களது கொள்கை, செயல்பாடுகளில் ஒரு தெளிவற்ற அரசியலை அவர்கள் செய்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அது இண்டியா கூட்டணியின் வெற்றிக்கு உதவும் தாக்கமாகத்தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 6, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 6, 2026
FLASH: தளபதி கச்சேரி புக்கிங் தொடங்கியது

Bookmyshow, Ticketnew போன்ற தளங்களில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டிக்கெட் புக்கிங் தமிழகத்தில் தொடங்கியது. சென்சார் சான்றிதழ் லேட்டான சூழலில், ‘தளபதி கச்சேரி’ புக்கிங் எப்போது என நேற்று முதலே ரசிகர்கள் தவித்து போயிருந்தனர். H.வினோத் இயக்கத்தில் விஜய்யுடன் மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நீங்க டிக்கெட் போட்டாச்சா?


