News September 29, 2025

நடராஜ ஆசனம் செய்வதன் நன்மைகள்!

image

நடராஜ ஆசனம் செய்வதற்கு முதலில் இடது காலை கீழே ஊன்றி வலது காலை பின்னோக்கி தலைக்கு நேராக தூக்க வேண்டும். பின்னர் படத்தில் உள்ளதுபோல் வலது கையால் வலது காலை பிடித்துக்கொண்டு இடது கையை சற்று மேல் நோக்கி நீட்டுங்கள். தினமும் 20 நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்துவர உடலில் ரத்த ஓட்டம் தலை முதல் பாதம் வரை சீராக இருக்கும். தலை வலி, கால் பாத வலி, பசியின்மை நீங்கும். மூட்டுக்கள் பலம் பெற்று கூன் சீராகும். SHARE.

Similar News

News September 29, 2025

விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு: சற்றுநேரத்தில் விசாரணை

image

கரூர் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்தது எதேச்சையான விபத்து இல்லை; இது திட்டமிட்ட சதி என்று விஜய் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தை சிறப்பு அமர்வு அமைத்து விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது.

News September 29, 2025

விஜய்யை நேரில் சந்திப்பேன்: சீமான்

image

கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்திலிருந்து தம்பி விஜய் மீண்டு வர வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி மக்களை சந்திக்க சிறிய பொதுக்கூட்டங்களை விஜய் பயன்படுத்த வேண்டும் என்றும், நாற்காலியில் அமர்ந்து பேச வேண்டும் எனவும் அட்வைஸ் செய்துள்ளார். மேலும், தேவைப்பட்டால் விஜய்யை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவேன் என்றும் சீமான் தெரிவித்தார்.

News September 29, 2025

BREAKING:மௌனம் கலைத்தார் ஆதவ் அர்ஜுனா

image

மரணத்தின் வலியையும், கரூர் மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மரணத்தின் வலியை 5 வயது சிறுவனாக தனது தாயின் தற்கொலையை பார்த்தபோதே உணர்ந்ததாக தெரிவித்த அவர், அந்த வலியை தற்போது மீண்டும் இந்த மரணங்கள் ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தின் நம்பிக்கையை சுமக்கும் உறவாக தனது பயணம் இருக்கும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!