News October 5, 2025
பிம்பங்களை நம்புவதும் மூடநம்பிக்கை: கனிமொழி

மூதாதையர்கள் சொன்னதை அப்படியே கடத்துவது மட்டும் மூடநம்பிக்கையல்ல, நம்மை ஆள்வதற்கு தகுதி உண்டா இல்லையா என்று தெரியாமல் சில பிம்பங்களை நிஜமாக நம்புவதும் மூடநம்பிக்கை தான் என்று விஜய்யை கனிமொழி மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஒருவர் வந்துவிட்டார், அவர் மாற்றிவிடுவார் என்று நம்புவதும் மூடநம்பிக்கையே என்றும் சாடினார். இனி கற்பிக்கும் மூடநம்பிக்கைகளையும் கடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Similar News
News October 5, 2025
உங்களின் ‘ஐந்து பேர்’ யார்?

நீங்கள் எந்த ஐந்து பேருடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறீர்களோ, அந்த ஐந்து பேரின் சராசரியாகத்தான் நீங்கள் விளங்குவீர்கள் என்ற ஒரு வாக்கியம் உண்டு. நம்மை சுற்றி இருப்பவர்கள் தான் நம் எண்ணத்தை தீர்மானிக்கிறார்கள். உத்வேகம் தரும் நபர்களை கண்டறியுங்கள். வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகும் மனிதர்களுடன் நீங்கள் இருந்தால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அப்படியானவர்கள் உங்களுக்கு இருக்கிறாரா?
News October 5, 2025
பெரியார் உலகத்துக்கு திமுக ₹1.5 கோடி நிதி

திருச்சியில் அமையவுள்ள பெரியார் உலகத்துக்கு தனது ஒரு மாத சம்பளத்தை அளிப்பதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அவர், திமுக MP, MLA-க்களின் ஒரு மாத சம்பளம் சேர்த்து மொத்தம் ₹1.5 கோடியை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதை நன்றியுணர்வோடு அளிப்பதில் திமுகவினர் பெருமை அடைவதாகவும், பெரியார் இருந்தபோதே அவருடைய சிந்தனைகளை செயல்படுத்தியது திமுக என்றும் கூறினார்.
News October 5, 2025
பலமுடன் திரும்புவோம்: வெ.இண்டீஸ் கேப்டன்

தாங்கள் 160 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது ஏமாற்றம் அளித்ததாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் கூறியுள்ளார். இந்த அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 1 இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் என சேஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.