News July 8, 2025
கடன் செயலிகளில் கடன் வாங்குவதற்கு முன்..

உடனடி தேவைக்காக கடன் செயலியில் கடன் வாங்குவோர், இவற்றை கவனியுங்க:
*கடன் செயலிகளில் கடன் வாங்காமல் இருக்க வேண்டும்.
*வாங்க நினைத்தால், அந்த ஆப் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்றதா என்பதை கவனிக்கவும்
*அத்துடன் அந்த செயலி NBFC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
*Playstore-ல் இருக்கும் ஆப்களை மட்டுமே பயன்படுத்தவும். மெசெஜ் வழியாக கிடைக்கும் ஆப்களில் கடன் பெற வேண்டாம்.
Similar News
News September 14, 2025
SCIENCE: வானம் நீல நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா?

சூரியனின் ஒளி நிறமற்றதாக தெரியலாம், ஆனால் அதில் பல நிறங்கள் உள்ளது. இந்த நிறங்கள் காற்று மண்டலங்களை கடந்து பூமியில் விழும். இதிலுள்ள நீல நிறம் மட்டும் காற்று மண்டலத்தை எளிதில் கடப்பதால் அது வானில் அதிகமாக தென்படுகிறதாம். ஆனால், Sunrise, Sunset-ன் போது வானில் சூரியன் கீழே இருப்பதால், நீல நிறம் காற்று மண்டலத்தை தாண்டி பயணிக்க சிரமப்படுமாம். இதனால் அப்போது மட்டும் வானம் ஆரஞ்சாக தெரிகிறது.
News September 14, 2025
விஜய் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?

தமிழ்நாட்டுக்கு இதுவரை எந்த நன்மையையாவது விஜய் செய்துள்ளாரா என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். ₹200 – ₹300 கோடி சம்பளம் வாங்கும் விஜய் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை எனக் கூறிய அவர், வெறுமென அரசை கேள்வி கேட்பது சரியல்ல எனவும் தெரிவித்தார். மத்திய அரசு கொடுக்கும் இடையூறுகளை தாண்டி, CM ஸ்டாலின் மக்களுக்கு நலத் திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
News September 14, 2025
‘நாங்க சாகப் போறோம்.. SORRY’

‘நாங்கள் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம். மன்னித்துவிடுங்கள். உங்களை தொந்தரவு செய்ய நாங்கள் விரும்பவில்லை. சாவுக்கு யாரும் காரணமில்லை’. கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சாக்ஷி சாவ்லா(37), மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுடன் 13-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவனுக்கு கடைசியாக எழுதிய வரிகள் இவை. மகனின் நிலையால் ஏற்பட்ட மன அழுத்தமே 2 பேரின் சாவுக்கும் காரணமாக அமைந்துள்ளது. So Sad.