News April 1, 2025

வெயிலால் எகிறிய பீர் விற்பனை

image

வெயில் வெளுத்து வாங்குவதால், டாஸ்மாக்கில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமாக குளிர் காலத்தில் பிராந்தி, விஸ்கி, ரம் ஆகியவை அதிகமாகவும், பீர் விற்பனை குறைவாகவும் இருக்கும். தற்போது வெயில் அதிகரித்துள்ளதால், பிராந்தி, விஸ்கிக்கு பதில் மது பிரியர்கள் பீரை அதிகளவில் வாங்குகின்றனர். இதனால் சுமார் 30% பீர் விற்பனை அதிகரித்துள்ளது. அதுவும், பீர் சில்னஸ் குறைவாக இருந்தால் கூட வாங்க மறுக்கின்றனராம்.

Similar News

News January 20, 2026

அதிமுக வெளிநடப்பு செய்தது

image

TN சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி வழங்காததாக கூறி அதிமுக MLA-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து வெளியேறிய அவர்கள், மாநில அரசே ராஜினாமா செய் எனவும் சட்டம்-ஒழுங்கு எங்கே போச்சு எனவும் கோஷமிட்டனர். இதற்கு முன்னதாக கவர்னர் வெளிநடப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 20, 2026

திமுக கூட்டணியில் அடுத்த கட்சி.. முடிவு இறுதியாகிறது

image

தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடந்ததாக தகவல் கசிந்துள்ளது. இதில் கூட்டணியை பற்றி அனைவரும் டிஸ்கஸ் செய்த நிலையில், இறுதியாக அன்புமணி இருக்கும் அணிக்கு போவதாக இல்லை என ராமதாஸ் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், NDA கூட்டணியை தவிர்த்து ராமதாஸ் தரப்பு திமுக அல்லது தவெக கூட்டணியை தேர்வு செய்யலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

News January 20, 2026

பேரவையில் மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார் கவர்னர்

image

2026-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஆனால் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என கூறி கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்துள்ளார். இதனை கண்டித்த CM ஸ்டாலின், கவர்னரின் செயல் அவையின் மரபிற்கு அவமதிப்பு எனவும், ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்றார். இதனால் கவர்னர் உரை வாசிக்கப்பட்டதாக கருதப்படுவதாக CM ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார்.

error: Content is protected !!