News August 26, 2024
Reporter ஆகி கிருஷ்ண ஜெயந்தி செய்தி அனுப்புங்க..

மக்களே, உங்கள் பகுதி கிருஷ்ண ஜெயந்தி செய்திகளை Way2News-ல் பார்க்க ஆர்வமாக உள்ளீர்களா? உடனே Way2News செயலியில் கீழே உள்ள Post என்ற பட்டனை அழுத்தி உங்கள் மொபைல் எண்ணுடன் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். பின், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட உங்கள் பகுதி நிகழ்வுகளை படங்களுடன், 40 வார்த்தைகளில் டைப் செய்து பதியவும். இதன் மூலம் நீங்கள் ரிப்போர்ட்டர் அங்கீகாரம் பெறுவதுடன், வருவாயும் ஈட்டலாம்.
Similar News
News November 21, 2025
திமுக வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: நயினார்

தென்காசியில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி கொண்டு வருவோம் என சொன்ன திமுக, அதை நிறைவேற்றவில்லை என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியை கூட தமிழ்நாட்டுக்கு திமுக கொண்டு வரவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் 11 கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 21, 2025
ஜடேஜாவை CSK விட்டது ஆச்சரியமாக உள்ளது: கும்ளே

ஜடேஜா போன்று ஒரு நபரை CSK டிரேட் செய்தது ஆச்சரியம் அளிப்பதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். வழக்கமாக சென்னை அணி இதுபோன்று செய்து பார்த்ததில்லை என தெரிவித்த அவர், அதை அவர்கள் செய்திருக்க கூடாது எனவும் கூறியுள்ளார். CSK , ராஜஸ்தானின் டிரேட் IPL-லில் முக்கியமானது என்றும், ஆனால் RR ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்குமா என்பது முக்கியமான கேள்வி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News November 21, 2025
வரலாற்றில் இன்று

1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
1963 – இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.
1991 – சுதந்திர போராட்ட வீரர் தி. சு.அவிநாசிலிங்கம் மறைந்தார்.
2022 – தமிழறிஞர் ஔவை நடராசன் மறைந்த தினம்.


