News October 25, 2024
Beauty Tips: உதடு கருப்பு நீங்க இதை செய்யுங்கள்!

♦உதடுகள் கருமையாக வைட்டமின் குறைபாடு காரணம் என்றால் வைட்டமின் A, C உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். ♦பாலிஃபினால் நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். ♦உதடு வெடிப்புறுவதை தடுக்க அதிகமாக நீர் குடிக்க வேண்டும். ♦உதட்டின் மேல் வெண்ணெய் & பாதாம் எண்ணெய் தேய்த்து வர உதடுகள் கருமை நீங்கும். ♦தினமும் தயிர் & சர்க்கரை தடவி ஸ்க்ரப் செய்யலாம். ♦ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து உதடுகள் மீது தடவி வரலாம்.
Similar News
News December 2, 2025
சர்ச்சையில் சிக்கினார் விஜய் (PHOTO)

மதுரையில் 100-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணையும் விழாவில் விஜய்யும் பங்கேற்றார். ஆனால், நேரில் இல்லை, ‘கட் அவுட்’ வடிவில். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ‘கட் அவுட்’ வடிவில் இருந்த விஜய்தான், புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கியது. இந்த PHOTO வெளியாகி சர்ச்சையான நிலையில், இந்திய அரசியல் வரலாற்றிலேயே கட் அவுட் மூலம் அடையாள அட்டை வழங்கியது TVK மட்டுமே என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
News December 2, 2025
டிட்வா புயல்.. இலங்கைக்கு தோள் கொடுத்த இந்தியா

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 53 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சாகர்பந்துவின் ஒரு பகுதியாக Chetak, MI-17 ஹெலிகாப்டர்கள் இலங்கை விமானப்படையுடன் இணைந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. பல நாடுகளை சேர்ந்த 150-க்கும் பேரை மீட்க இந்தியா உதவியுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
News December 2, 2025
தங்கம் விலை குறைந்தது!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக சரிவை சந்தித்து வருகிறது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $6.62 குறைந்து $4,212-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி 1 அவுன்ஸ் $0.07 உயர்ந்து $56.79 ஆக உள்ளது. இந்திய சந்தையில் நேற்று, தங்கம் சவரனுக்கு ₹96,560-க்கு விற்பனையானது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் விலை குறைவால் இன்று நம்மூரிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


