News September 14, 2025
Beauty: வழுக்கையிலும் முடி வளர இந்த ஒரு விஷயம் போதும்

ஆண்களே, முடி உதிர்வு அதிகமாக இருப்பதால் இளம்வயதிலேயே வழுக்கை விழுகிறதா? அதனை சரி செய்ய, ➤விளக்கெண்ணெய்யை சூடுபடுத்தி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து, அதை 3 நாள்களுக்கு ஒருமுறை தலையில் தடவி மசாஜ் செய்யவும். ➤10 நிமிடங்கள் லேசான மசாஜ் செய்து, அரை மணிநேரம் ஊறவிடுங்கள். ➤பிறகு தலைக்கு குளித்துவர வழுக்கை விழுந்த இடங்களில் முடி வளரும். அனைத்து ஆண்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
Similar News
News September 14, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. முடிவுக்கு வந்த காத்திருப்பு

புதிதாக 17 லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 9 லட்சம் பேர் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என DCM உதயநிதி அறிவித்துள்ளார். தீபாவளி பரிசாக அவர்களது வங்கிக் கணக்கில் அடுத்த மாதம் 15-ம் தேதி ₹1,000 வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனர்களின் எண்ணிக்கை 1.24 கோடியாக அதிகரிக்கும்.
News September 14, 2025
இரவில் போன் பார்த்தால் ஆண்மை குறையுமா..!

மாலை & இரவில் நீண்டநேரம் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிப்பதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. ஃபோனில் இருந்து வெளியாகும் குறைந்த அலைநீள ஒளியானது விந்தணுக்களின் எண்ணிக்கை, செயல்திறன் மற்றும் ஆயுளை பாதிக்கிறது. விந்தணுக்களின் DNA-ல் பாதிப்பும் ஏற்படுகிறது. இந்தியாவில் 23% ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உள்ளதாக WHO கூறுகிறது. ஆண்களே, போன் பயன்படுத்துவதை கொஞ்சம் குறைக்கலாமே.
News September 14, 2025
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சூப்

உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்த லைப்ஸ்டைல் கோச் லூக் குட்டினோ அளிக்கும் சூப் ரெசிபி: தேவையான பொருள்கள் : சர்க்கரை வள்ளி கிழங்கு-1, பூண்டு -1, ஸ்பிரிங் ஆனியன்-கொஞ்சம், பார்ஸ்லி, ரோஸ்மெரி -சிறிதளவு. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சூப் தயாரிக்கவும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தி சளி, ஃப்ளூ, வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். ட்ரை பண்ணலாமே!