News October 26, 2025
நாளை மிக கவனம்

புயல் எச்சரிக்கையால் TN-ல் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. நாளை(அக்.26) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. BE CAREFUL
Similar News
News October 26, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 26, ஐப்பசி 8 ▶கிழமை:ஞாயிறு ▶நல்ல நேரம்:7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM
▶எமகண்டம்:12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை
News October 26, 2025
ஃபேஷன் ப்ரீக்காக மாறிய ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய நடிகைகளில் அதிக இன்ஸ்டா பாலோயர்ஸ் கொண்ட நடிகையாக உள்ளார். நேஷ்னல் க்ரஸ் ராஷ்மிகா, தற்போது ஃபேஷன் ஃப்ரீக்காக மாறியுள்ளார். அவரது ஃபேஷன் போட்டோஸுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News October 26, 2025
திமுகவிடம் 25 சீட் கேட்போம்: விசிகவின் சங்கத்தமிழன்

விசிக இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என அக்கட்சி நிர்வாகி சங்கத்தமிழன் தெரிவித்துள்ளார். எங்களுக்கு இருக்கும் டிமாண்டை வைத்து 25 சீட்டுகள் வரை கூட கேட்போம். நாங்கள் தான் கேம்சேஞ்சர். எங்கள் கூட்டணிக்காக EPS கூட காத்திருந்தார். நாங்கள் வராததால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். விசிகவின் முக்கியத்துவம் திமுக தலைமைக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.


