News October 17, 2025
நாளை மிக கவனம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு 6 நாள்கள் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். கவனமாக இருங்கள் நண்பர்களே..!
Similar News
News December 8, 2025
குமரி: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 8, 2025
இவர் தானா.. நடிகை சுனைனாவின் மணவாளன்!

நடிகை சுனைனாவின் காதலர் இவர்தான். UAE-யை சேர்ந்த இவரின் பெயர் கலீத் அல் அம்மேரி. Influencer ஆக பெரும் பிரபலமடைந்த கலீத்தை, சுனைனா காதலிப்பதாக நீண்ட காலமாக பேசப்பட்டது. கலீத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுனைனாவின் கையை இறுக்கி பிடித்த எடுத்து கொண்ட போட்டோக்களை கலீத் இன்ஸ்டாவில் பதிவிட்டு, தங்களது காதலை அறிவித்துள்ளார்.
News December 8, 2025
பள்ளிகள் 12 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் நாளை மறுநாள் முதல் டிச.23 வரை நடைபெறவுள்ளன. 6-ம் வகுப்புக்கு காலை 10- 12 மணி, 7-ம் வகுப்புக்கு பகல் 2- 4 மணி, 8-ம் வகுப்புக்கு காலை 10- 12.30 மணி, 9-ம் வகுப்புக்கு பகல் 2- 4.30 மணி, 10-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி, 11-ம் வகுப்புக்கு பகல் 1.45 – மாலை 5 மணி, 12-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும். டிச.24- ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும்.


