News August 27, 2025
இன்று காலை 8 மணிக்கு தயாரா இருங்க மக்களே

ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே ஸ்பெஷல் ரயில்களை அறிவித்துள்ளது. ஆக.28-ம் தேதி, சென்னை சென்ட்ரல் – கண்ணூருக்கும் (TRAIN NO: 06009), ஆக.30-ம் தேதி, பெங்களூரு – கண்ணூருக்கும் (TRAIN NO: 06125) ஸ்பெஷல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் புக் பண்ண தயாரா இருங்க நண்பர்களே..!
Similar News
News March 3, 2026
இலவசமாக வேலைக்கு ஆள்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆள்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை இந்த படிவத்தை <
News March 3, 2026
இன்னும் கூட்டணி அமைக்கவில்லை: ராமதாஸ்

நமக்கான வாகனம் இதோ அருகில் வந்துவிட்டது; அதில்தான் பயணிக்க இருக்கிறோம் என்று கடந்த வாரம் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் மூலம் <<19233839>>ராமதாஸ் <<>>கூட்டணியை உறுதி செய்திருந்தார். இந்நிலையில், தற்போதுவரை யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை எனக்கூறி, அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அடுத்த 3 நாள்களில் யாருடன் கூட்டணி என்பது உறுதி செய்யப்படும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
காங்கிரஸுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்

திமுக – காங்கிரஸ் இடையிலான மோதலுக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக தொகுதிகளை கேட்டு அடம்பிடித்த காங்கிரஸுக்கு 25 மட்டுமே தரமுடியும் என திமுக பேச்சுவார்த்தை குழு கூறிவிட்டது. இதனால், கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கார்கே அறிவுறுத்தலின்படி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவார்த்தையில், 29+1 சீட்டுகள் வரை கொடுக்க ஸ்டாலின் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.


