News February 27, 2025
மழையை சந்திக்க தயாராக இருங்க.. அரசு அவசர கடிதம்

மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு கடிதம் எழுதியுள்ளது. ராமநாதபுரம், தஞ்சை, நெல்லை, குமரி, விருதுநகர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வரும் 1ஆம் தேதி வரை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News March 11, 2026
சருமத்தை Detox செய்வது எப்படி?

பளபளப்பான சருமத்தைப் பெற கெமிக்கல் நிறைந்த காஸ்மெடிக் பொருள்களை விடுத்து பின்வரும் இயற்கையான டீடாக்ஸ் முறைகளை பின்பற்றலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ➤தினமும் 2.5 லி நீர் அருந்துங்கள் ➤சர்க்கரை, பால் உணவுகளை குறைத்துக்கொள்ளுங்கள் ➤ஆவாரம் டீ, மஞ்சள் டீ போன்றவை பருகுங்கள் ➤புரோபயாடிக் & நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.
News March 11, 2026
CINEMA 360: சூர்யா 47 படத்தில் சிம்பு!

*ஜித்து மாதவன் இயக்கி வரும் ‘சூர்யா 47’ படத்தில் கேமியோ ரோலில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம் *ரஜினி நடிக்க மறுத்த அஸ்வத் மாரிமுத்துவின் கதையில் கமல் நடிக்கலாம் என கூறப்படுகிறது *நயன்தாரா, கவின் நடித்து வரும் ‘ஹாய்’ படத்தின் புது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது * ராஜ் நிடிமோரு இயக்கும் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 11, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர்.. அரசு கொடுத்த மகிழ்ச்சி செய்தி

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிலிண்டர் தட்டுப்பாடு பற்றி மக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரை முன்னுரிமை அடிப்படையில் விநியோகித்து வருவதாகவும், முன்பதிவு செய்த இரண்டரை நாளில் விநியோகம் செய்யப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. SHARE


