News August 23, 2025

வாரத்தில் ஒருநாள் சோம்பேறியா இருங்க!

image

இன்றைய நவீன காலத்தில் எப்போது பார்த்தாலும் மன அழுத்தமாக இருக்கிறது என்று புலம்புபவர்கள் அதிகம். ஆனால், வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக சோம்பேறியாக இருந்தால் மன அழுத்தம் குறையுமாம். அதுமட்டுமல்லாமல், ரத்த அழுத்தம் சீராகி, மனநலம் மேம்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஓய்வு எடுப்பது நேரத்தை வீணடிப்பதல்ல; அது படைப்பாற்றலை அதிகரித்து, கவனத்தை கூர்மையாக்கி உழைப்புத் திறனையும் அதிகரிக்கிறதாம்.

Similar News

News August 23, 2025

TVK மீது பாயும் விமர்சனங்கள்.. React செய்த விஜய்

image

தவெகவின் மதுரை மாநாட்டுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அளவு பேரன்பு காட்டும் நபர்களை உறவுகளாக பெற என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை என பதிவிட்ட அவர், தவெக மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம் எனவும் அல்லவையை புறந்தள்ளி புன்னகைப்போம் எனவும் பதிவிட்டுள்ளார்.

News August 23, 2025

குப்பையையும் விட்டுவைக்காத திமுக அரசு: EPS

image

நாட்டிலேயே கடன் வாங்குவதில் முதலிடம் தமிழ்நாடு என்ற சாதனையை CM ஸ்டாலின் படைத்துள்ளதாக EPS சாடியுள்ளார். திருவெறும்பூர் பரப்புரையில் பேசிய அவர், அதிமுகவின் அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வழங்கப்படுகிறது என்றார். மேலும், திமுக ஆட்சியில் DGP முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து நியமனங்களிலும் ஊழல் நடப்பதாகவும், குப்பைக்கு கூட வரி போட்டு மக்களின் பணம் சுரண்டப்படுகிறது எனவும் விமர்சித்தார்.

News August 23, 2025

ஜனநாயகனில் N.ஆனந்திற்கு முக்கிய ரோல்…

image

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சில பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். தவெக பொ.செ., N.ஆனந்த் போராட்டக்காரராக நடித்திருக்கிறாராம். விஜய்யின் முந்தைய படங்களை இயக்கிய அட்லீ, நெல்சன், லோகேஷ் கனகராஜ் பத்திரிகை நிருபர்களாகவும், அனிருத் பாடல் ஒன்றில் தோன்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் கேமியோவுக்கு ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.

error: Content is protected !!