News May 16, 2024
அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்

மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய அடுத்த 15 நாட்கள் INDIA கூட்டணியினர் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 19, 2025
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஊதியம் உயர்வு

தமிழகத்தில் SIR பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், BLO-க்களுக்கான ஊதியத்தை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ₹1,000-லிருந்து ₹2,000-ஆகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் ₹6,000-லிருந்து ₹12,000-ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ₹12,000-லிருந்து ₹18,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
News November 19, 2025
விஜய்க்கு ஆதரவாக பேசிய A.C.சண்முகம்

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் விஜய்க்கு ஆதரவாக புதிய நீதி கட்சித் தலைவர் A.C.சண்முகம் பேசத் தொடங்கியுள்ளார். 2026 தேர்தலில் களமிறங்கும் விஜய்க்கு வாக்கு வங்கி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 50,000 வாக்குகள் வரை விஜய் பெறுவார். தவெகவில் இருந்து வலுவான வேட்பாளர்கள் போட்டியிட்டால் எளிதாக வெற்றிபெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
News November 19, 2025
இருமல் மருந்துகளை இனி ஈஸியாக விற்க முடியாது

ம.பி.யில் இருமல் சிரப் குடித்த 24 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இருமல் மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, டாக்டரின் பரிந்துரை சீட்டு, மருந்து விற்பனைக்கான உரிமை இருந்தால் மட்டுமே இருமல் மருந்து விற்பனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.


