News August 7, 2025
இனி BCCI RTI கீழ் வராது!

அரசு நிதியோ, உதவியோ பெறாத நிறுவனம் என்பதால், திருத்தப்பட்ட விளையாட்டு மசோதாவில், – BCCI-க்கு, RTI சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. RTI சட்டம் அரசு நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அறிய உதவுகிறது. இதிலிருந்து BCCI விலக்கு பெற்றதால், இனிமேல், BCCI-ல் என்ன செய்கிறது, எவ்வளவு வருமானம், தேர்வு நடைமுறைகள் குறித்து அறிய முடியாது. Public game, private rules!
Similar News
News August 7, 2025
ஆசிய கோப்பை: பும்ரா அவுட்.. ரிஷப் பண்ட் டவுட்!

Asia Cup-க்கான அணி தேர்வு சூடுபிடித்துள்ளது. ENG தொடரில் காயமடைந்த பண்ட் & Work Load காரணமாக பும்ராவும் விளையாட மாட்டார்கள் என கூறப்படுகிறது. கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்றும், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் கண்டிப்பாக இடம் பிடிப்பார்கள் என தகவல் வெளிவந்துள்ளது. நீங்க பெஸ்ட் பிளேயிங் XI சொல்லுங்க?
News August 7, 2025
கொலைநாடாக மாறிய தமிழ்நாடு: OPS விளாசல்

TN-ல் பட்டப்பகலில் படுகொலைகள், கொள்ளைகள், பாலியல் துன்புறுத்தல் என சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக OPS சாடியுள்ளார். திருப்பூர் SSI கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், மதுவால் தமிழ்நாடு கொலை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார். ஸ்டாலினை சந்தித்த பிறகு திமுகவுடன் நெருக்கம் காட்டுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது கவனிக்கத்தக்கது.
News August 7, 2025
வெள்ளி விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹127-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆக.4-ம் தேதி கிலோ வெள்ளி ₹1,23,000-ஆக இருந்த நிலையில், 3 நாளில் ₹4,000 அதிகரித்துள்ளது. தொடர்ந்து உயர்வை கண்டு வரும் தங்கம், வெள்ளி விலை, வரும் நாள்களில் குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.