News September 6, 2025
ஸ்பான்சர்ஷிப் விலையை நிர்ணயித்த BCCI

ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதா அமலான நிலையில், Dream 11 உள்ளிட்ட ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்கள் உடனான ஒப்பந்தத்தை BCCI முறித்தது. இதனையடுத்து, புதிய ஸ்பான்சர்ஷிப்களை கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், Bilateral போட்டிகளுக்கு ₹3.5 கோடி, ICC, ACC உள்ளிட்ட போட்டிகளுக்கு ₹1.5 கோடி என ஸ்பான்சர்ஷிப் இருப்பு விலையை BCCI நிர்ணயித்துள்ளது. இதனிடையே, ஆசிய கோப்பை தொடர் செப்.9-ல் தொடங்குகிறது.
Similar News
News September 6, 2025
தினம் ₹200… முடிவில் ₹28 லட்சம் பெறலாம்

தினம் ₹200 என்ற அளவில், மாதம் ₹6,000 முதலீடு செய்தால், ₹28 லட்சம் வரை பெறும் Jeevan Pragati திட்டத்தை LIC வழங்குகிறது. 12 – 45 வயதுடையோர் இணையலாம். 12 முதல் 20 ஆண்டு பாலிசி காலம் கொண்ட இத்திட்டத்தில், 20 ஆண்டு முடிவில் சேரும் ₹14,40,000 தொகையானது கூடுதல் பெனிபிட்டுகளுடன் சேர்த்து அதிகபட்சம் ₹28 லட்சம் வரை பெறலாம். சேமிப்புடன் லைப் இன்ஷூரன்ஸும் வேண்டுவோருக்கு இது சிறந்த திட்டமாகும்.
News September 6, 2025
ஜெர்மனி பயணத்தால் ₹15,516 கோடி முதலீடு: CM ஸ்டாலின்

தமிழ்நாட்டில் EV உற்பத்திக்காக UK-வின் ஹிந்துஜா குழுமம் ₹7,500 கோடி முதலீடு செய்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்மூலம், 1000-க்கும் மேற்பட்டவருக்கு வேலை கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும், UK & ஜெர்மனி பயணத்தால் மொத்தம் ₹15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் 17,613 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News September 6, 2025
நாளை இரவு 9.56 மணிக்கு இதை மிஸ் பண்ணிடாதீங்க

நாளை(செப்.7) இரவு 9.56-க்கு நிகழவுள்ள முழு சந்திர கிரகணம் அதிகாலை 1.31 மணி வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. ரத்த கலரில் இருக்கும் அந்த நிலவு வானில் வித்தியாசமாக காட்சியளிக்கும். இதை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். சென்னை பிர்லா கோளரங்கில் தொலைநோக்கியில் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த சந்திர கிரகணம் 31.12.2028-ல் தான் நிகழும் என்பதால் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.