News April 16, 2025
IPL அணிகளுக்கு BCCI கொடுத்த அலெர்ட்

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஐபிஎல் அணிகளின் ஓனர்கள், வீரர்களை மோசடி வலையில் வீழ்த்த முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி ஃபிக்ஸிங் உள்ளிட்ட மோசடி செயல்களை செய்யத் தூண்டுவதாகவும், இதனால் விழிப்புணர்வுடன் செயல்படவும் அணிகளுக்கு BCCI அறிவுறுத்தியுள்ளது. மேலும், சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராவது தொடர்பு கொண்டால் உடனே தெரிவிக்கவும் கூறியுள்ளது.
Similar News
News January 18, 2026
செங்கையில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

செங்கல்பட்டு மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <
News January 18, 2026
நான் இருப்பதே திமுகவுக்கு மறந்துபோச்சு: சசிகலா

MGR-ஜெயலலிதா ஆட்சி மட்டும் தான் உண்மையான மக்களாட்சி என சசிகலா தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில், திமுக ஆட்சியில் வெறுமென பேச்சில் மட்டுமே மக்களாட்சி இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை எதிரிகளே இல்லையென திமுக நினைப்பதாகவும், ஆனால் தான் இருப்பதையே அவர்கள் மறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். விரைவில் உண்மை நிலவரத்தை அனைவரும் பார்ப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
BREAKING: விஜய் தரப்புக்கு அடுத்த சம்மன் அனுப்பிய CBI

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் தவெக வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமிக்கு CBI சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே விஜய் உள்ளிட்ட தவெக முக்கிய நிர்வாகிகள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். நாளையும் விஜய் ஆஜராக உள்ளார். இந்நிலையில், மீண்டும் தங்கள் தரப்புக்கே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் விஜய் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


