News October 27, 2025

ஸ்ரேயஸ் உடல்நிலை குறித்து BCCI விளக்கம்

image

<<18116578>>ஸ்ரேயஸ் ஐயர்<<>> நலமுடன் இருப்பதாக BCCI தெரிவித்துள்ளது. மேலும், ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவர் வேகமாக குணமாகி வருவதாகவும், BCCI மற்றும் சிட்னி டாக்டர்கள் குழு அவரை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. இதற்கிடையே ஸ்ரேயஸின் பெற்றோர்கள் அவசர அவசரமாக ஆஸி.,க்கு புறப்பட்டு சென்றுள்ளனர். ஆஸி.,க்கு எதிரான 3-வது ODI போட்டியின் போது, அவருக்கு விலா எலும்பில் அடிபட்டது.

Similar News

News October 27, 2025

ராசி பலன்கள் (28.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News October 27, 2025

SIR நடவடிக்கை: TN அரசியல் கட்சிகளுடன் EC ஆலோசனை

image

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கப்படவுள்ளது. இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாதக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

News October 27, 2025

ஆஸி., வீராங்கனைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

image

இந்தியாவில் ODI WC-யில் விளையாடிவரும் <<18100854>>ஆஸி., வீராங்கனைகளிடம்<<>>, சமீபத்தில் அத்துமீறப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலை விட்டு கஃபேக்கு சென்ற போது அத்துமீறிய அவலம் நடந்ததால், இனி வீராங்கனைகள் வெளியில் செல்லும் போது, போலீசாரிடம் கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!