News August 17, 2025

படுகாயம் ஏற்பட்டால் மாற்று வீரருக்கு BCCI அனுமதி

image

உள்ளூர் போட்டிகளின்போது படுகாயம் அடைந்தவர்களுக்கு பதில் மாற்று வீரர்களை களமிறக்க BCCI அனுமதி அளித்துள்ளது. இது ரஞ்சி டிராபி, துலீப் டிராபி போன்ற முதல்தர போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். முன்னதாக, இங்கி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுடன் களமிறங்கினார் பண்ட். அதேபோல், கை தோள்பட்டை காயத்துடன் விளையாடினார் இங்கி.,ன் வோக்ஸ். இந்நிலையில் தான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 26, 2026

நெல்லை: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

நெல்லை மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News March 26, 2026

EPS-ன் Makeup முகத்துக்கு பின்னால் அமித்ஷா: சிவசங்கர்

image

திமுகவை விமர்சிக்கும் தகுதி EPS-க்கு இல்லை என SS சிவசங்கர் கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக இருப்பதாக <<19478396>>EPS<<>> பேசியதை குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணி கட்சிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது; அதனால்தான் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது என தெரிவித்தார். மேலும், EPS மேக் அப் போட்டு அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதற்கு பின்னால் இருப்பது அமித்ஷா என்றும் விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

இந்திய கப்பல்களுக்கு தடை இல்லை: ஈரான் அமைச்சர்

image

இந்தியாவுக்காக ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து திறந்தே இருக்கும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதியளித்துள்ளார். ஈரானுடன் நட்பு நாடாக இருக்கும் இந்தியா, சீனா, ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான கப்பல்கள் தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கான எரிபொருள் தட்டுப்பாடு பிரச்னை நீங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 5 கப்பல்கள் இந்தியா நோக்கி வருகின்றன.

error: Content is protected !!