News October 16, 2025

BC இடஒதுக்கீடு: தெலங்கானா அரசின் மனு தள்ளுபடி

image

உள்ளாட்சி தேர்தலில் BC இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தக்கோரிய தெலங்கானா அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் விதித்த தடையை உறுதி செய்த உச்சநீதிமன்றம், தற்போதைய இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பொதுப் பகுதிகளில் 50% இடஒதுக்கீடு வரம்பை மீற முடியாது என்று SC திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது.

Similar News

News October 17, 2025

சோகத்தில் முடிந்த டாம் குரூஸின் காதல் கதை

image

ஹாலிவுட்டில் முன்னணி நடிகரான டாம் குரூஸும், நடிகை அனா டி அர்மாஸும் காதல் பறவைகளாக பறந்து வந்தனர். இருவரின் திருமணமும் விண்வெளியில் நடக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி, பலரை பிரமிக்க வைத்தது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இருவரும் இப்போது பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. திருமணம் வரை சென்ற 9 மாத காதலின் முறிவுக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

News October 17, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News October 17, 2025

₹10,00,000 இருந்தால் ஜான் சீனாவை பார்க்கலாம்

image

WWE குத்துச்சண்டை வரலாற்றில் மிகவும் பிரபலமான ஜான் சீனா விரைவில் ஓய்வு பெறுகிறார். டிச.13-ம் தேதி பாஸ்டனில், ஜான் சீனாவின் இறுதி மோதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் டிக்கெட் விலை லட்சக்கணக்கில் விற்கப்படுகிறது. ₹10 லட்சம், ₹8.30 லட்சம் என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டாலும், ஜான் சீனாவின் ஆட்டத்தை பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட் வாங்குகின்றனர்.

error: Content is protected !!