News February 18, 2025
மனு பாக்கருக்கு BBC விருது

2024ஆம் ஆண்டுக்கான BBCயின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது, மனு பாக்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஸ்மிரிதி மந்தனா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் இருந்த நிலையில், அவர் தேர்வாகியுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கர், சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 3, 2025
விஜய்க்கு வெளியில் நடப்பது தெரியாது: TKS

மழைநீர்த் தேக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு TKS இளங்கோவன் மறுப்பு தெரிவித்துள்ளார். விஜய் வீட்டைவிட்டு வெளியில் வருவதில்லை. நகரில் என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரியாது. மழைநீர்த் தேக்கம் குறித்து பேசுவதற்கு அவர் நகர் முழுவது சென்று பார்த்தாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
News December 3, 2025
குழந்தைகளுக்கு Non-Veg எப்போது கொடுக்கலாம்?

அசைவ உணவுகள் சத்து நிறைந்தவை என்றாலும் அதை எப்போது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என சில பெற்றோருக்கு தெரிவதில்லை. குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு சரியாக செரிமானம் ஆகாது என்பதால் தாய்ப்பால் தவிர எதுவும் கொடுக்கக்கூடாது. இதன்பின் அவர்களுக்கு அசைவ உணவுகளை கொடுக்கலாம். முதலில் சூப், வேகவைத்து மசித்த கறி ஆகியவற்றை மட்டும் கொடுங்கள். அதீத காரம், உப்பு சேர்க்கவேண்டாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
News December 3, 2025
BREAKING: நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கையை அடுத்து நாளை (டிச.4) சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தொடர்ந்து 3-வது நாளாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


