News March 7, 2025

இந்தியாவை கௌரவித்த பார்படாஸ்.. மோடி நெகிழ்ச்சி…

image

பார்படாஸ் நாட்டின் சார்பில் ‘Honorary Order of Freedom of Barbados’ விருது பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அவரது சார்பில் இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பபித்ரா மர்கெரிட்டா பெற்றுக்கொண்டார். இதற்காக பார்படாஸ் அரசு மற்றும் மக்களுக்கு மோடி,தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் நெருங்கிய உறவுக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 9, 2025

கத்திய மஸ்க்; வேடிக்கைப் பார்த்த டிரம்ப்!

image

அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தின்போது வெளியுறவு அமைச்சர் ரூபியோவுடன் எலான் மஸ்க் வாக்குவாதம் செய்துள்ளார். அதனை அதிபர் டிரம்ப் வேடிக்கை பார்த்து மெளனமாக இருந்தது சர்ச்சையாகியுள்ளது. இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ஒன்றுமே நடக்கவில்லை என கோபத்துடன் அவர் கூறியதும் பேசுபொருளாகியுள்ளது. பணி நீக்கம் தொடர்பாக மஸ்க்குக்கும், ரூபியோவுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.

News March 9, 2025

சிக்கன் விலை தெரியுமா?

image

நாமக்கல் மண்டலத்தில் உயிருடன் கூடிய கறிக்கோழி விலை 1 கிலோவுக்கு ரூ.107ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ கோழிக்கறி ரூ.175 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. இதேபோல், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.80ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட நகரங்களில் முட்டை ரூ.4.50 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.

News March 9, 2025

சிரியாவில் சண்டை தீவிரம்: 1,000க்கும் மேற்பட்டோர் பலி

image

சிரியாவில் அரசு படையினருக்கும், EX அதிபர் ஆசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே மீண்டும் சண்டை வெடித்துள்ளது. அசாத் ஆதரவாளர்களின் பகுதிக்குள் புகுந்து அரசு பாதுகாப்பு படைகள் 2 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் 750 பேர் உள்பட இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடங்களில் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!