News September 13, 2024
தடை செய்யப்பட்ட பூண்டு விற்பனை

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட சீன பூண்டுகள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பூண்டு கிலோ ரூ.450- ரூ.600 வரை விற்கப்படுவதால், விலை குறைந்த சீன பூண்டுகளை வாங்கி விற்பனை செய்கிறார்கள். சீன பூண்டுகளில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 461 ▶குறள்: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். ▶பொருள்: எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்.
News September 17, 2025
இலவச வர்த்தக ஒப்பந்தம்: டென்மார்க் PM உடன் பேச்சு

இந்தியா – ஐரோப்பிய யூனியன் உடனான இலவச வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, டென்மார்க் PM மெட்டெ ப்ரெட்ரிக்சன் உடன் PM மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசித்தார். ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்க உள்ள டென்மார்க்கிற்கு PM மோடி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உக்ரைன் போரை விரைவில் முடிவிற்கு கொண்டு வருவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
News September 17, 2025
யூசுஃப் பதான் அரசு நில ஆக்கிரமிப்பாளர்: கோர்ட்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான் நில ஆக்கிரமிப்பாளர் என குஜராத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பிரபலங்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்றும் கண்டித்துள்ளது. அவரது வீட்டிற்கு அருகே இருந்த அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கடந்த 2012-ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நிலத்தை வாங்க விரும்புவதாக அவர் தாக்கல் செய்த மனுவை சமீபத்தில் கோர்ட் நிராகரித்தது.