News March 29, 2024
வங்கிகள் இன்று செயல்படாது

கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி விழாவையொட்டி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வங்கிகளும் இன்று மூடப்பட்டிருக்கும். அதேநேரத்தில் இணையதள வங்கி சேவைகள் செயல்படும். ஏடிஎம் மைய சேவைகளும் எந்தத் தடையும் இன்றி செயல்படும். நிதியாண்டு 31ஆம் தேதி முடிவதால், நாளை (சனி), நாளை மறுநாள் (ஞாயிறு) வங்கிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்.. பக்தர்களுக்கு ஃப்ரீ!

திருப்பதியில் வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் நடைபெறுகிறது. இதில், ஜனவரி 2 முதல் 8-ம் தேதி வரை தரிசன டோக்கன் பெறாவிட்டாலும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 நாள்கள், டிசம்பர் 30 – ஜனவரி 1-ம் தேதி வரையிலான தரிசன டோக்கன்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவை அனைத்து ஏழுமலையானின் பக்தர்களுக்கும் பகிரவும்.
News December 16, 2025
விஜய்க்கு புதுச்சேரி CM பதிலடி

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இயங்கவில்லை என விஜய் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை ஆகியவை பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்கூடாக பார்க்கலாம் என CM ரங்கசாமி பதிலடி கொடுத்துள்ளார். புதுச்சேரியில் பரப்புரை மேற்கொண்ட விஜய், ஆளும் NDA கூட்டணியில் உள்ள NR காங்கிரஸை விமர்சிக்காதது பேசுபொருளான நிலையில், ரங்கசாமி இவ்வாறு கூறியுள்ளார்.
News December 16, 2025
ஒரே நாளில் விலை ₹4,000 குறைந்தது

தங்கத்துடன் போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வந்த வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ₹4,000 குறைந்துள்ளது. இதனால் சில்லறை வர்த்தகத்தில் 1 கிராம் ₹211-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,11,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை 1.53% குறைந்ததே இந்திய சந்தையில் வெள்ளி விலை சரிவுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


