News March 1, 2025
இம்மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை

பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை, 2, 4வது சனிக்கிழமை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு இம்மாதம் மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இதனால், வங்கிகளுக்கு நேரடியாக சென்று அத்தியாவசிய வங்கி சேவைகள் மற்றும் பரிவர்த்தனை மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த லீவு நாட்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். முழு விவரங்களை அறிய <
Similar News
News March 1, 2025
ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்: இன்றே கடைசி

ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.1) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயதாக 18ம், அதிகபட்ச வயதாக 36ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலையில் சேர விரும்புவோர், ரயில்வே ஆள்தேர்வு <
News March 1, 2025
உங்க உள்ளங்கையில் ‘X’ ரேகை இருக்கா?

அலெக்சாண்டர், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரின் கைகளில் இந்த X ரேகை இருந்ததாம். உங்கள் கையிலும் இருந்தால், பெரும் ஆளுமை திறன் கொண்டவராக இருப்பீர்கள். வாழ்வில் அனைத்திலும் தெளிவான பார்வை கொண்டவர்கள். பிறருக்குப் பயனாக இருக்க வேண்டுமென எண்ணுவீர்கள். பணப் பிரச்னைகள் வந்தாலும், அவை எளிதில் நீங்கும். திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். அரசியலில் அதிக நாட்டம் இருக்கும். யாருக்கு இந்த ரேகை இருக்கு?
News March 1, 2025
முதல் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள்

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார், மறைந்த தியாகராஜ பாகவதரின் 115ஆவது பிறந்தநாள் இன்று. 1934ஆம் ஆண்டு பவளக்கொடி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், வேகமாக உச்ச நட்சத்திரமானார். ரசிகர்கள் பலர் இவரைப் போலவே ஹேர் ஸ்டைல் வைத்துக் கொள்வது, இவர் குரலிலேயே பாடல்கள் பாடுவது என்று அவ்வளவு ரசித்தனர். மூன்று தீபாவளிகளுக்கு தொடர்ந்து ஓடிய ஹரிதாஸ் படத்தின் ஹீரோவும் இவர்தான்.