News June 25, 2024
வைப்புத்தொகைக்கு அதிக வட்டி தரும் வங்கிகள்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 400 நாள்களுக்கான வைப்புத்தொகைக்கு 7.10% வட்டி வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 400 நாள்களுக்கு 7.25%, கனரா வங்கி 444 நாள்களுக்கு 7.25%, HDFC வங்கி 18 மாதம் முதல் 21 மாதம் வரை 7.25%, ICICI வங்கியில் 15 மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு 7.20%, BOB வங்கியில் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு 7.25%, ஆக்சிஸ் வங்கி 17 மாதங்களுக்கு 7.20% வட்டி வழங்குகின்றன.
Similar News
News March 1, 2026
‘வாய் கிழிய பேசுவதை தவிர திமுக ஒன்றுமே செய்யவில்லை’

தமிழ்நாட்டை திமுக அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என PM மோடி கூறியுள்ளார். பணம்தான் நமக்கு, பிரச்னை மக்களுக்கு என்பதே அவர்களின் எண்ணம் என்ற அவர், திமுக ஏழைகளுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமிழ்நாட்டு உரிமைகளை பற்றி வாய் கிழிய திமுக பேசுவதாகவும், பேச்சை தவிர திமுக ஒன்றுமே செய்ததில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
News March 1, 2026
World War 3.. அன்றே கணித்தாரா பாபா வங்கா?

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் உலக பேமஸ். இவர், 2026-ல் 3-ம் உலகப் போர் உருவாகலாம், அதில் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு முக்கியத் தொடர்பு இருக்கும் என கணித்திருந்தார். தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் நடந்து, மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தில் இருப்பதால், அவரது கணிப்பு உண்மையாகி வருவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
News March 1, 2026
காங்கிரஸ் தொகுதிகளில் கைவைக்கும் திமுக?

காங்கிரஸுக்கு 2021-ஐ விட தற்போது குறைந்த தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே 41 தொகுதிகளை காங்., கேட்டுவருகிறது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்து கொடுக்கும் முடிவில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இம்முறை காங்கிரஸுக்கு 23 தொகுதிகளே கிடைக்கும் என்கின்றனர். இந்நிலையில், காங்கிரஸை திமுக பழிவாங்குகிறதா என கதர் சட்டைகள் கொதிக்கின்றனர்.


