News April 9, 2024
FDக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

ஹெச்டிஎஃப்சி வங்கி 18 முதல் 21 மாத கால அளவிற்கான வைப்புத் தொகைக்கு 7.25% வட்டி வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி 15 மாத வைப்புத் தொகைக்கு 7.20% வட்டி தருகிறது. கோடக் வங்கி 390 நாள்கள் முதல் 391 நாள்களுக்கு 7.4% வட்டியும், பஞ்சாப் நேஷ்னல் வங்கி 400 நாள்களுக்கு 7.30% வட்டியும் தருகிறது. ஸ்டேட் பேங்க்கை பொருத்தமட்டில் 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைக்கு 7% வட்டி வழங்குகிறது.
Similar News
News January 19, 2026
பீர் குடித்த இளைஞர்கள் மரணம்!

ஆந்திராவில் போட்டி போட்டுக்கொண்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராந்தியையொட்டி சித்தூரை சேர்ந்த 6 இளைஞர்கள் மது அருந்தி கொண்டாடியுள்ளனர். இதில் மணிகுமார்(34), புஷ்பராஜ்(26) இருவரும் 19 பாட்டில் பீர் குடித்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
News January 19, 2026
சபரிமலை நெய் மோசடி.. 33 பேர் மீது வழக்கு

சபரிமலையில் ஏற்கெனவே தங்கம் திருடப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது நெய் மோசடி அம்பலமாகியுள்ளது. போலியான அபிஷேக நெய் பிரசாத பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ₹36.24 லட்சம் மோசடி நடந்தது கண்டறியப்பட்ட நிலையில், தொடர்புடைய 33 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
News January 19, 2026
பெண்கள் வயதாக தெரிவதற்கு 5 முக்கிய காரணங்கள்

30 வயதைக் கூட தாண்டவில்லை என்றாலும் நாம் வயதானவர் போல் காட்சியளிப்பதற்கு உணவுமுறை, வாழ்க்கைமுறை, பழக்கங்கள் உள்ளிட்டவை முக்கிய காரணிகளாகும். குறிப்பாக, பெண்கள் வயதாக தெரிவதற்கு 5 காரணங்களை சரும நிபுணர்கள் கூறுகின்றனர். அவற்றை SWIPE செய்து பார்த்து, உங்களுடைய வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் இளமையான தோற்றத்தை இழக்கமாட்டீர்கள்.


