News March 20, 2025
வங்கி சேவைகள் 4 நாள்கள் முடங்கும் அபாயம்!

வாரத்தில் 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கு முந்தைய 2 நாள்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையாக உள்ளன. இதனால், 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளது. அதனால், பொதுமக்கள் தங்களது வங்கி பணியை வரும் 22ம் தேதியே முடித்துக் கொள்வது நல்லது.
Similar News
News March 21, 2025
மரண படுக்கையிலும் உதவி செய்த ஹூசைனி

ரத்த புற்றுநோயால் ஹாஸ்பிடலில் மரண படுக்கையில் இருக்கும் நடிகர் ஷீகான் ஹூசைனி, தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக தானம் வழங்கியுள்ளார். உறுப்புதான ஏற்பாடுகளை செய்த கலா மாஸ்டருக்கு நன்றி கூறிய அவர், “தன் இதயத்தை” மட்டும் தனது வில்வித்தை – கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் எனவும் விழிப்புணர்வு செய்தார்.
News March 21, 2025
IPL 2025: முதல் போட்டிக்கு மழை அச்சுறுத்தல்

IPL 2025 போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியிலேயே ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை உள்ளது. KKR – RCB அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை அங்கு கனமழை பெய்ய 90% வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. ஒருவேளை மழையால் நாளை போட்டி முழுவதும் ரத்தானால், இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்துகொள்ளும்.
News March 21, 2025
நாமினிகள் எளிதாக அணுக ‘செபி’ வசதி

இறந்தவர்களின் கணக்கை நாமினிகள் எளிதாக அணுக வசதியாக, டிஜிலாக்கருடன் இணைந்து செயல்பட உள்ளதாகப் செபி (SEBI) அறிவித்துள்ளது. இதனால் பயனர் மறைந்தால், அவர் நியமித்த நாமினிகளுக்கு டிஜிலாக்கர் கணக்கைப் படிக்க மட்டும் அனுமதி வழங்கப்படும் எனவும், இதன் மூலம் பங்குச்சந்தையில் பல கோடி மதிப்பிலான அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத சொத்துக்களின் எண்ணிக்கை குறையும் என்றும் கூறப்படுகிறது.