News March 22, 2025
வங்கி ஸ்டிரைக் ஒத்திவைப்பு

வரும் 24, 25ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, வேலைநிறுத்தம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால், திங்கள்கிழமை வழக்கம்போல் வங்கிகள் செயல்படும்.
Similar News
News March 22, 2025
பாஜக பீஸ் போன பல்ப்: சேகர்பாபு

ஊழலை மறைக்க சிலர் (திமுக) மொழியின் பெயரால் அரசியல் செய்கின்றனர் என்று அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார். பாஜக என்பது பியூஸ் போன பல்பு; அது ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்கும் அதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறிய அவர், திமுகவை மிரட்டி பார்ப்பதுபோல அமித்ஷா பேசுகிறார். அவரின் மிரட்டல், உருட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது என்றார்.
News March 22, 2025
ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த ரேவந்த்

நியாயமான தொகுதி மறுவரையறையை வலியுறுத்தி ஐதராபாத்தில் அடுத்த கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார். ஐதராபாத்தில் நடைபெறும் அடுத்த கூட்டத்திலும் தென்மாநில தலைவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், தொகுதி மறுவரையறை தொடர்பாக தலைவர்களாகிய நாம் மக்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 22, 2025
மோடி, அமித்ஷாவை குறிப்பிட்டு எச்சரித்த ஸ்டாலின்

தெலங்கானா தேர்தல் பரப்புரையின்போது தென்மாநிலங்களில் தொகுதிகள் குறையும் என PM கூறினார். கோவைக்கு வந்த அமித்ஷாவிடம் இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, அவர் சரியாக பதிலளிக்கவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை சாதாரணமாகக் கருதக்கூடாது என குறிப்பிட்ட அவர், தொகுதிகள் குறைந்தால், நம் மாநிலங்கள் தொடர்பான முடிவை மற்றவர்கள் (வட மாநிலங்கள்) எடுப்பார்கள் என எச்சரித்தார்.