News March 20, 2024
வீட்டுக்கடன் வட்டியை குறைத்த வங்கி

வீட்டுக்கடனுக்கான வட்டியை பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா 15 புள்ளிகளை இந்த மாத இறுதிவரை குறைத்துள்ளது. அந்த வங்கி இதுவரை வீட்டுக்கடனுக்கு 8.45% வட்டி வசூலித்து வந்தது. அதனை 8.3%ஆக குறைத்துள்ளது. மேலும், சேவை கட்டணத்தையும் ரத்து செய்துள்ளது. முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎப்சி வீட்டுக்கடனுக்கு 8.4% வட்டி வசூலிக்கின்றன. அதனுடன் ஒப்பிடுகையில் இது 10 புள்ளிகள் குறைவாகும்.
Similar News
News January 6, 2026
டிரம்ப் கோழையே, முடிஞ்சா புடி: கொலம்பிய அதிபர்

கொலம்பியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில், அதற்கு ரிப்ளை கொடுத்த கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, மதுரோவை கைது செய்ததுபோல முடிந்தால் தன்னையும் <<18758081>>கைது செய்து<<>> பார் என சவால் விட்டிருக்கிறார். மேலும், டிரம்ப்பை கோழை என சொன்ன அவர், உண்மையை நேருக்கு நேர் அமர்ந்து பேச அழைப்பும் விடுத்திருக்கிறார்.
News January 6, 2026
விஜய்யின் கடைசி சம்பளம் இவ்வளவா..!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘ஜனநாயகன்’ ஜன.9-ல் ரிலீஸாகிறது. இப்படத்திற்காக விஜய் ₹220 கோடி சம்பளம் பெற்றதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலில் களம் காணும் விஜய்யின் கடைசி படம் இதுவென்பதால், சினிமாவில் அவர் பெறும் கடைசி சம்பளம் இதுவாகும். H.வினோத் -₹25 கோடி, அனிருத் -₹13 கோடி, பாபி தியோல் & பூஜா ஹெக்டே ஆகியோருக்கு தலா ₹3 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News January 6, 2026
தீபத்தூண் வழக்கு: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை <<18776534>>இரு நீதிபதிகள் அமர்வு<<>> உறுதி செய்துள்ளது. அத்துடன் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இதோ ◆தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் தான் தீபத்தூண் உள்ளது ◆மாவட்ட கலெக்டரின் மேற்பார்வையில் கோயில் நிர்வாகத்தினர் தீபம் ஏற்ற வேண்டும் ◆மலை மீது தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்க கூடாது ◆தர்காவிற்கு இடையூறு இல்லாமல் தூணை இடம் மாற்றலாம்.


