News October 14, 2025
வங்கி கடன்.. வந்தது HAPPY NEWS

ஓராண்டில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1% வரை குறைந்ததால், கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து வருகின்றன. குறிப்பாக, இந்த மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05% வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் EMI குறைந்துள்ளது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு பலனாக அமையும். SHARE IT.
Similar News
News October 15, 2025
தேர்வுக்குழு மீது ஷமி அதிருப்தி

ஆஸி.,க்கு எதிரான ODI தொடரில் தேர்வு செய்யப்படாததன் காரணம் புரியவில்லை என ஷமி தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல், துலீப் டிராபி என தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் தன்னிடம், ஃபிட்னஸ் குறித்து தேர்வுக்குழு விவாதிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு அணியை தேர்வு செய்யும் முன், வீரர்களிடம் ஃபிட்னஸ் குறித்து ஆலோசிப்பது தேர்வுக்குழுவின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
பாக்., – ஆப்கன் மீண்டும் மோதல்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில நாள்களாக பதற்றம் நீடித்து வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டிருந்த நிலையில், பிற இஸ்லாமிய நாடுகள் அறிவுறுத்தல்களால் தாக்குதல் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், நள்ளிரவில் மீண்டும் பாக்., முகாம்களை குறிவைத்து ஆப்கன் தாக்குதலை நடத்தியுள்ளது. பாக்., தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ஆப்கன் நடவடிக்கை எடுத்துள்ளது.
News October 15, 2025
தீபாவளி ஸ்பெஷல்: நாய்களுக்கென தனி வழிபாடு

நேபாளில் Tihar என்ற பெயரில் 5 நாள்கள் தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இப்பண்டிகையின் 2-வது நாளில் நாய்கள் வழிபாடு நடத்தப்படுகிறது. மனிதர்களுக்கு விசுவாசமாக இருக்கும் நாய்களிடம் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதமாக, வளர்ப்பு மற்றும் தெரு நாய்களுக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகம் இட்டு வழிபாடு நடத்தப்படுகின்றன. மேலும், இந்த நாளில் நாய்களுக்கு சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகின்றன.