News March 20, 2024

மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் விடுமுறை ரத்து

image

மார்ச் 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசுத் துறைகளின் கணக்குகளை பராமரிக்க வரும் 31ஆம் தேதி வங்கிகளின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான அரசின் நிதி விவரங்களை முடிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News September 18, 2025

புதிதாக களமிறங்கிய பைக்குகள்

image

சமீபத்தில் ராயல் என்பீல்டு, டிவிஎஸ், ஹீரோ என பலரும் தங்களது புதிய மாடல் பைக்குகளை களமிறக்கியுள்ளனர். அதன் போட்டோக்களை மேலே இணைத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த பைக் எது? கமெண்ட்ல சொல்லுங்க. Onroad price-யில் மாற்றம் இருக்கும் என்பதால் Ex-Showroom price கொடுக்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

WA: நீரஜ் ஏமாற்றம்… பதக்கம் வெல்லும் கனவு தகர்ந்தது

image

உலக தடகள சாம்பியன்ஷிப், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஏமாற்றம் அளித்தார். இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 84.03மீ ஈட்டி எறிந்து 8வது இடம் பிடித்தார். ஒரு முறை கூட அவர் 85மீ தாண்டி ஈட்டி எறியவில்லை. கடந்த முறை தங்கம் வென்றிருந்த நீரஜ், இம்முறை பதக்கமின்றி திரும்புவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீம் 10வது இடமே பிடித்தார்.

News September 18, 2025

ராகுல் போலி கதைகளை பரப்புகிறார்: அமித்ஷா

image

வாக்கு திருட்டு குறித்து பொய்யான கதையையே ராகுல் பரப்பி வருவதாக அமித்ஷா சாடியுள்ளார். பிஹாரில் பேசிய அவர், ராகுல் காந்தி உள்பட ஒட்டுமொத்த காங்கிரஸாரும், வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களை காப்பாற்றும் வேலையிலேயே ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், இந்திய இளைஞர்களுக்கு பதில், ஊடுருவல்காரர்களுக்கு ராகுல் வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!