News December 5, 2024

வங்கி மோசடி: தொழிலதிபருக்கு மரண தண்டனை

image

வியட்நாம் வங்கியில் மோசடியில் ($12 பில்லியன்) ஈடுபட்ட பெண் தொழிலதிபர் மை லானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Van Thinh Phat என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்த அவர், 2012-22 வரை போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். அவற்றை காட்டி, அந்நாட்டின் சைகோன் வணிக வங்கியை கட்டுப்படுத்தி, மோசடி செய்ததை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதில் 75% தொகையை அவர் திருப்பி அளித்தால் தண்டனை குறைக்கப்படலாம்.

Similar News

News April 29, 2025

இந்த பாக். பெண் மட்டும் இந்தியாவில் இருப்பார்!

image

காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த சீமா ஹைதர் நாடு கடத்தப்படமாட்டார். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றாலும், இந்தியரை திருமணம் செய்து கொண்டதால், அவர் இந்திய நாட்டின் பிரஜையாகி விட்டார். இதன் காரணமாக சீமா இந்தியாவிலேயே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு பிரச்னையில் பாகிஸ்தானியர்களை வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 29, 2025

9 செவ்வாய்கிழமைகளில் முருகனை வழிபட்டால்….

image

9 செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை பெருக்கி, செவ்வாய் தோஷம் பாதிப்புகளை குறைக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள்.

News April 29, 2025

பப்ளிசிட்டி இல்லாமல் உதவும் அஜித்.. ஜனாதிபதி புகழாரம்

image

பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது X தளத்தில், தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் அஜித், பல்துறை நடிகர்களில் ஒருவராக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சினிமாவைத் தாண்டி பப்ளிசிட்டி இல்லாமல் பல தொண்டு செயல்களை அஜித் செய்து வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

error: Content is protected !!