News December 19, 2024

வங்கி ஊழியருக்கு காது வெட்டு.. கஸ்டமர் போல் வந்தவர் பகீர்

image

சென்னை T.நகர் பர்க்கிட் சாலை HDFC வங்கிக்குள் புகுந்த நபர், ஊழியர் ஒருவரின் காதை வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் போல் வங்கிக்குள் நுழைந்தவர், ஊழியர் தினேஷை சரமாரியாக வெட்டியதில் அவரது காது மற்றும் உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. தினேஷை அரிவாளால் வெட்டிய நபரை மடக்கிப் பிடித்த சக ஊழியர்கள் மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News September 17, 2025

நாமக்கல்: பிடிஓ கடத்தல் வழக்கில் அதிரடி கைது!

image

கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராக செயல்பட்டு வந்த, பிரபாகரன் பணத்திற்காக கடத்தப்பட்ட நிலையில் சில நாட்களுக்குப் பிறகு, பள்ளிபாளையம் போலீஸாரால் பிரபாகரன் மீட்கப்பட்டார் இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மணிமாறன், மருது பாண்டியர் ,ஈஸ்வரன் ஆகிய மூவரை இன்று பள்ளிபாளையம் போலீசார் கைது செய்து, குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

News September 17, 2025

பாஜகவில் இருந்து திமுகவிற்கு தாவினார்

image

BJP, திண்டுக்கல் மேற்கு மாவட்ட Ex செயலாளர் மகுடீஸ்வரன் உள்ளிட்ட 300 பேர் திமுகவில் இணைந்தனர். பழனியில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக, பாஜக, தவெகவில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். காலை உணவு திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ள மகுடீஸ்வரனை திமுகவில் இணைத்தது சர்ச்சையாக வெடித்துள்ளது.

News September 17, 2025

டிரம்ப் ஆதரவாளர் கொலை: இளைஞருக்கு மரண தண்டனை?

image

டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட டைலர் ராபின்சன் மீது கொலை உள்பட 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. டைலரை சுட்டுக் கொல்லும் வகையில் மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.<<17683928>> சார்லியை<<>> கடந்த 10-ம் தேதி பொதுவெளியில் வைத்து டைலர் சுட்டுக் கொன்றார்.

error: Content is protected !!