News September 6, 2025

வங்கி EMI தொகை குறைந்தது.. மகிழ்ச்சி அறிவிப்பு

image

கடனுக்கான வட்டி விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகள்(0.10%) குறைக்கப்பட்டுள்ளதாக கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. இதனால், வாகன கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் ஓராண்டு கால MLC வட்டி விகிதம் 9.55%-ல் இருந்து 9.45% ஆக குறைகிறது. 1, 3, 6 மாத கால கடன்களுக்கான வட்டி 9.30 – 9.45% வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், பயனர்களுக்கு EMI தொகை குறைய உள்ளது.

Similar News

News September 6, 2025

SCIENCE: நாம் கனவுகளை மறப்பது ஏன் தெரியுமா?

image

இரவில் தூங்கும்போது வந்த கனவை, நாம் காலையில் எழுந்ததும் மறப்பது ஏன் தெரியுமா? ஒரு கனவை உருவாக்குவது, அதை உணர்வது, என 2 வேலைகளையும் நமது மூளையே செய்கிறது. இதனால் கனவில் நாம் கவனிக்காமல் விடும் விஷயங்கள், தானாகவே நமக்கு மறந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அதோடு நமக்கு தேவைப்படாது எனக் கருதி, சில தகவல்களை நமது மூளை மறந்துவிடுமாம். நீங்கள் நேற்று கண்ட கனவு ஞாபகம் இருக்கா?

News September 6, 2025

அமைதி காக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்

image

செங்கோட்டையன் நேற்று மனம்திறந்து 10 நாள் கெடு விதிக்க, அதற்கு பதிலாக இன்று அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து <<17629139>>EPS நீக்கினார்<<>>. இதனால் அரசியல் களம் பரபரப்பில் இருந்தாலும், கட்சித் தொண்டர்கள் அமைதியாகவே உள்ளனர். வெளியிலுள்ள அதிருப்தியாளர்களை தவிர்த்து, அதிமுக முக்கிய தலைவர்களும் அமைதி காக்கின்றனர். கட்சிக்குள் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை எனில், செங்கோட்டையன் முடிவு என்னாகும்? உங்கள் கருத்து?

News September 6, 2025

மேஜிக் செய்த PM மோடி: பிரேமலதா பாராட்டு

image

PM மோடி மேஜிக் செய்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் புகழ்ந்துள்ளார். திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பேட்டியளித்த அவர், GST வரி குறைப்பு விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், நிறைகுடம் தழும்பாது என்பதை போல, அமெரிக்க வரிவிதிப்பு பிரச்னைக்கு, PM மோடி அமைதியாக முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!