News August 24, 2025

வங்கி வாடிக்கையாளர்களே அலர்ட்.. SBI அறிவிப்பு

image

ஓராண்டுக்கும் மேலாக பரிவர்த்தனை இல்லாத SBI கணக்குகளை, வங்கிக் கிளைகள், நெட்/ மொபைல் பேங்கிங் மூலம் KYC-ஐ புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று (ஆக.23) வெளியான நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்குள் KYC புதுப்பிக்கப்படவில்லை என்றால், ஓராண்டுக்கு மேலாக பரிவர்த்தனை (அ) மினிமம் பேலன்ஸ் இல்லாத வங்கிக் கணக்குகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும் என SBI தெரிவித்துள்ளது.

Similar News

News March 28, 2026

கேரளாவில் சசிகலா கட்சி போட்டி

image

சசிகலாவின் அஇபுதமமுக கட்சி கேரளாவில் போட்டியிடுகிறது. அங்குள்ள தேவிகுளம் (தனி) தொகுதியில் செல்லத்துரை என்பவர் போட்டியிடுவார் என சசிகலா அறிவித்துள்ளார். ஏற்கெனவே, புதுச்சேரியில் 4 தொகுதிகளில் அஇபுதமமுகவும், 10 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியான செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகமும் போட்டியிடுகின்றன. தமிழகத்திற்கான வேட்பாளர் பட்டியல் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

News March 28, 2026

கோலிக்காக வரிசைக்கட்டி நிற்கும் சாதனைகள்..!

image

பெரிதும் எதிர்பார்க்கப்படும் IPL திருவிழா இன்று தொடங்குகிறது. ரன் மெஷின் விராட் கோலி இந்த சீசனில் IPL-ல் பல முக்கிய ரெக்கார்டுகளை உடைப்பதற்கு வாய்ப்புள்ளது. ரன் குவிப்பில் விராட் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய ரெக்கார்டுகளை உங்களுக்காக தொகுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்து பார்க்கவும். இதில் எதெல்லாம் சாத்தியம்?

News March 28, 2026

FLASH: தங்கம் விலை ₹17,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலுக்கு நடுவே, மார்ச் மாதம் தங்க நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. இம்மாதத்தில் மட்டும் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹16,920 குறைந்துள்ளது. மார்ச் 1-ம் தேதி ₹1,26,200 ஆக இருந்த 1 சவரன், தற்போது ₹1,09,280-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் பெருமளவில் குறைந்து 1 கிலோ ₹2.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!