News March 19, 2025
ஏப்.1 முதல் UPI கணக்குகள் முடக்கம்!

ஏப்ரல் 1 முதல் சில அதிரடி நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ளவுள்ளன. அந்த வகையில், GPAY, PHONEPE, PAYTM போன்ற UPI ஆப்களுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்கள் நீண்டகாலமாக செயல்படாமல் இருந்தால், அந்த UPI கணக்குகள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, UPI உடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2025
கணவரை கொன்று கூறுபோட்டு, சாட்டிங் செய்த மனைவி

கணவர் <<15809593>>செளரப்பை <<>>ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று கூறுபோட்ட முஸ்கான், சிக்கிவிடக் கூடாது எனத் திட்டமிட்டுள்ளார். கொலைக்கு பிறகு செளரப் செல்போனுடன் ஹிமாச்சல் சென்ற இருவரும், அங்கிருந்து செளரப் தங்கைக்கு, வாட்ஸ்அப்பில் மெசேஜ்கள் அனுப்பியுள்ளார். ஹோலிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். ஆனால் போன் அழைப்பை மட்டும் தவிர்த்துள்ளார். எனினும், போலீசில் சிக்கிவிட்டார்.
News March 19, 2025
இளையராஜாவுக்கு சூர்யா குடும்பத்தின் பரிசு

கடந்த மார்ச் 8ஆம் தேதி லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இசைஞானி இளையராஜா சாதனை படைத்தார். இதற்கு பிரதமர், முதல்வர், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவரை வாழ்த்து மழையில் நனைத்தனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார், அவரது மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தாவுடன் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். அப்போது சிவகுமார் தங்க சங்கிலியை அவருக்கு பரிசாக அணிவித்தார்.
News March 19, 2025
திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமா?

திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதுகுறித்து 2006இல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பெண்கள் நலனுக்காக திருமணப் பதிவு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டது. அதன்படி, 1955 இந்து திருமணச் சட்டம் (அ) 1954 சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் 90 நாட்களுக்குள் பதிவு செய்யலாம். அந்த சான்று, சொத்துரிமை, விவாகரத்து, குழந்தை பாதுகாப்புக்கு மிகவும் அவசியம் ஆகும்.