News February 12, 2025

வங்கதேச கிரிக்கெட் வீராங்கனைக்கு தடை

image

SAவில் 2023 T20 WC போட்டியின் போது மேட்ச் பிக்சிங் செய்ததற்காக வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) வீராங்கனை ஷோலி அக்தருக்கு (36) ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் அப்போதே பிக்ஸிங் குறித்த ஆடியோ கிளிப்களை வெளியிட்டது. ஷோலி முதலில் குற்றச்சாட்டுகளை மறுத்தார். ஆனால் பின்னர் அவற்றை ஒப்புக்கொண்ட நிலையில், BCB அவருக்கு தடை விதித்துள்ளது.

Similar News

News March 11, 2026

கறார் காட்டும் திமுக… தீவிர ஆலோசனையில் வைகோ

image

திமுக – மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிமுகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும், அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக கூறிவிட்டதாம். இதுகுறித்து முடிவெடுக்கவும், 4 தொகுதிகள் ஒதுக்கினால், யார் யாரை வேட்பாளராக களமிறக்கலாம் என்பது குறித்தும், தற்போது நிர்வாகிகளுடன் வைகோ ஆலோசித்து வருகிறார்.

News March 11, 2026

மகளிர் உரிமைத்தொகை ₹5,000.. அரசின் புதிய அப்டேட்

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்து, பின்னர் மேல்முறையீடு செய்த பல லட்சம் பேருக்கு இம்மாதம் ₹5,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் மட்டத்தில் விசாரிக்கையில், கடந்த பிப்.28 வரை மாவட்ட வாரியாக தகுதி வாய்ந்தோர் பட்டியலை அரசு பெற்றுள்ளதாக கூறினர். ஏற்கெனவே 1.31 கோடி பேர் உதவித்தொகை பெறும் நிலையில், 4-5 லட்சம் பேர் கூடுதலாக இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

News March 11, 2026

கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியது SC

image

4-வது மாடியில் இருந்து விழுந்ததால் 13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஹரிஷ் ரானாவை (31) கருணைக்கொலை செய்ய SC அனுமதித்துள்ளது. இவரது உடல்நலனில் முன்னேற்றமும் இல்லை என டாக்டர்கள் கூறிய நிலையில், கண்ணியமான முறையில் கருணைக்கொலை செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் கருணைக்கொலை தொடர்பான சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!