News December 6, 2024
தேசத் தந்தை படத்தை நீக்கும் வங்கதேசம்

வங்கதேசத்தின் முதல் அதிபரும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபூர் ரஹ்மானின் படங்களை கரன்சி நோட்டுகளில் இருந்து அகற்ற அந்நாட்டின் இடைக்கால அரசு முடிவெடுத்துள்ளது. ‘வங்கதேசத்தின் தந்தை’ என அவர் போற்றப்பட்டு வந்தார். ஆனால், அவரை அவ்வாறு கருதவில்லை என முகமது யூனுஸ் அரசு தெரிவித்திருந்தது. 20, 100, 500 மற்றும் 1,000 மதிப்பிலான கரன்சியில் அவரது படம் அச்சிடப்படுகின்றன.
Similar News
News August 28, 2025
இந்தியா இதை மட்டும் செய்தால் நாளையே 25% வரி ரத்து: USA

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நாளையே இந்திய பொருள்களுக்கான வரி 25% குறைக்கப்படும் என வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார். இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்கர்கள் தங்களது வருமானம், வேலைகளை இழப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனாவை வர்த்தக கூட்டாளியாக பார்ப்பதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News August 28, 2025
உயிரிழந்த தவெக தொண்டர்… உதவிக்கரம் நீட்டிய தலைமை

விபத்தில் உயிரிழந்த தொண்டரின் குடும்பத்திற்கு தவெக தலைமை நிதியுதவி அளித்துள்ளது. மதுரை மாநாட்டில் பங்கேற்ற தஞ்சையை சேர்ந்த ஜெயசூர்யா வீடு திரும்பும் போது உயிரிழந்தார். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகிகள் ஜெயசூர்யாவின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி, கூடுதல் உதவிகளை செய்ய தயார் எனவும் உறுதியளித்தனர்.
News August 28, 2025
வசமாக சிக்கிய நடிகை லட்சுமி மேனன்?

ஐடி ஊழியரை கடத்தி, தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு செப்.17 வரை முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைதாகியுள்ள அவரது நண்பர்கள் மீது தங்க கடத்தல், அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸ் முடிவு செய்துள்ளது. இதனால், முன்ஜாமின் கெடு முடிந்த பிறகு லட்சுமி மேனன் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.