News September 15, 2024
வங்கதேச அணி இன்று சென்னை வருகை

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள வங்கதேச அணியினர் இன்று சென்னை வரவுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் வரும் 19ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், நாளை முதல் அந்த அணியினர் பயிற்சியை தொடங்கவுள்ளனர். இந்திய அணியினர் கடந்த 12ஆம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான BAN அணியில் முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன், லிட்டான் தாஸ் உள்பட 16 பேர் இடம் பெற்றுள்ளனர்.
Similar News
News December 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 564
▶குறள்:
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
▶பொருள்: நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.
News December 29, 2025
விஜய்யின் புதிய குட்டி ஸ்டோரி

‘ஜனநாயகன்’ விழாவில் ரசிகர்களிடம் குட்டி ஸ்டோரி ஒன்றை விஜய் பகிர்ந்தார். தன் ஆட்டோவில் பயணித்த கர்ப்பிணி, மழையில் நனையக்கூடாது என ஆட்டோகாரர் குடையை தருகிறார். எப்படி திருப்பி தருவது என கேட்டதற்கு, குடை தேவைப்படும் ஒருவரிடம் கொடுங்கள் என கூறியுள்ளார். பல கைகள் மாறிய அக்குடை இறுதியாக ஆட்டோகாரர் மகளிடம் வந்தது. எனவே, சின்ன சின்ன நல்லது செய்தால் வாழ்க்கை ஜாலியாக இருக்கும் என்று விஜய் கூறியுள்ளார்.
News December 29, 2025
மன உளைச்சலை உண்டாக்கும் திமுக அரசு: அன்புமணி

உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இத்திட்டத்தால் வேளாண் துறையின் பல்வேறு கிளைகளில் பணிசெய்யும் அதிகாரிகள், இனி நெல், வாழை, காய்கறி பயிர், வேளாண் பொறியியல் திட்டங்களையும் கண்காணிப்பார்கள் எனக் கூறியுள்ளார். இது அவர்களை கட்டாயப்படுத்தும் செயல் என்றும் திமுக அரசு கொடுக்கும் மன உளைச்சல் எனவும் X-ல் அவர் சாடியுள்ளார்.


