News March 6, 2025
வங்கதேச ஸ்டார் வீரர் ஓய்வு அறிவிப்பு

வங்கதேச அணியின் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முஷ்ஃபிகுர் ரஹீம், ODIயில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்த 19 ஆண்டுகால கெரியரில் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள், சக வீரர்கள், குடும்பத்தினருக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். ODIல் 2006ல் அறிமுகமான இவர், இதுவரை 274 போட்டிகளில் விளையாடி 9 சதம், 49 அரைசதங்களுடன் 7,795 ரன்களை எடுத்துள்ளார். கீப்பராக 243 கேட்ச்கள், 56 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
Similar News
News March 6, 2025
பெண்களுக்கு மாதம் ரூ.2,500.. டெல்லி அரசு வரையறை

டெல்லி தேர்தலின்போது பாஜக தரப்பில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தலில் வென்று ஆட்சியமைத்த பாஜக, அத்திட்டத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வருமானம் ஈட்டும் பெண்கள், IT வரி கட்டாதோருக்கு ரூ.2,500 வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
News March 6, 2025
₹1,200 முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம்

மாநிலத்தில் முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மாதந்தோறும் 10ம் தேதிக்குள் முதியோர் உதவித்தொகை ₹1,200 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், தற்போது மாதக் கடைசி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கு பலமுறை அலைந்து பணம் பெற வேண்டியிருப்பதால், 10ம் தேதிக்குள் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு முதியோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News March 6, 2025
இந்தியாவுக்கு சாதகம்… நியூசிலாந்துக்கு பின்னடைவு…

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவர் நியூசிலாந்தின் மேட் ஹென்றி. நேற்றைய அரையிறுதி ஆட்டத்திலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் கேட்ச் ஒன்றை பிடிக்க முயன்ற போது காயம் ஏற்பட்டது. இதனால் இந்தியாவுக்கு எதிரான இறுதி போட்டியில் ஹென்றி பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
. அவர் விளையாடவில்லை என்றால் அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.