News August 6, 2024
வங்கதேச போராட்ட பின்னணி (3/3)

மாணவ அமைப்புகளுக்கு ஆதரவாக பல்வேறு சங்கங்களும் போராட்டத்தில் குதித்ததால், ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாக அவரது அவாமி லீக் கட்சியினர் போராட்டத்தில் இறங்கினர். இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் இருதரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் ஏராளமானோர் பலியாகவே, பிரதமர் பதவியை ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்துள்ளார். புதிய அரசின் செயல்பாட்டை பொறுத்தே அமைதி திரும்பும்.
Similar News
News March 11, 2026
‘சிலிண்டர் தட்டுப்பாடு’ பயம் வேண்டாம்: PM மோடி

கொரோனா பேரிடர் நெருக்கடியை போல சிலிண்டர் தட்டுப்பாட்டில் இருந்து இந்தியா மீளும் என PM மோடி கூறியுள்ளார். மேற்கு ஆசிய போர் தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், போரினால் எரிவாயு விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை எனக் குறிப்பிட்டார்.
News March 11, 2026
BREAKING: விவசாயிகளுக்கு ₹2,000.. அரசு அறிவிப்பு

PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகை நாளை மறுநாள் (மார்ச் 13) விடுவிக்கப்படும் என சற்றுமுன் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அசாம் கவுகாத்தியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கான ₹19,000 கோடியை PM மோடி விடுவிக்க உள்ளார். இதன்மூலம், 9.35 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் தலா ₹2,000 டெபாசிட் செய்யப்பட உள்ளது. SHARE IT
News March 11, 2026
மதுவை திணிக்கும் திமுக அரசு: அன்புமணி

தமிழகத்தில் மது கலாசாரத்தால் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சி NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறியுள்ளார். திமுக அரசு மதுவை விற்கவில்லை மாறாக திணிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், மதுவால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.


