News August 6, 2024
வங்கதேச விவகாரம்: அனைத்து கட்சிக்கூட்டத்திற்கு அழைப்பு

வங்கதேச விவகாரம் தொடர்பாக இன்று காலை அனைத்துக்கட்சிக்கூட்டத்திற்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜுஜூ உள்ளிட்டோர் முன்னிலையில் நடக்கும் இக்கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வங்கதேச விவகாரம் குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளார். அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் இந்தியா-வங்கதேச எல்லைப்பாதுகாப்பு தொடர்பாகவும் ஆலோசனை நடக்க உள்ளது.
Similar News
News January 17, 2026
மெளனியாக இருப்பது ஏன்? விஜய்க்கு அதிர்ச்சி!

பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி CBI விசாரணையிலிருந்து பாதியில் திரும்பிய விஜய், பொங்கல் விழாக்களில் பங்கேற்காதது சர்ச்சையாக மாறியுள்ளது. குறிப்பாக கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற விஜய், பொங்கலுக்கு மட்டும் ஏன் X பதிவில் ஒரு வாழ்த்துடன் முடித்து கொண்டார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன் ஜன நாயகன் பட சென்சார் விவகாரத்தில் கூட அவர் மௌனியாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுந்துள்ளது.
News January 17, 2026
₹3 லட்சம் மெஷினுடன் வந்த சுப்மன் கில்: குடிநீர் பீதியா?

இந்தியா-நியூசிலாந்து தொடரின் இறுதிப்போட்டி இந்தூரில் நடக்கவுள்ளது. இந்நிலையில், கேப்டன் சுப்மன் கில், ₹3 லட்சம் மதிப்புள்ள அதிநவீன வாட்டர் பியூரிஃபையரை தனது ஹோட்டல் அறைக்கே கொண்டு வந்துள்ளாராம். பாட்டில் நீரையே மீண்டும் சுத்திகரித்து குடிக்கிறாராம். இது, இந்தூரில் குடிநீர் மாசு பிரச்னையால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கையா அல்லது அவரது தனிப்பட்ட பாதுகாப்பு நடைமுறையா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.
News January 17, 2026
அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு..

TN-ல் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் ரேஷன் பொருள்களை பெற்று வருகின்றனர். இந்த மாதம் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி, பொங்கல் விடுமுறையால், மாத ரேஷன் பொருள்கள் வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. குடியரசு தினத்தை ஒட்டியும் 2 நாள்கள் விடுமுறை வருகிறது. எனவே, பிப்ரவரியில், ஜனவரி மாத பொருளையும் சேர்த்து வழங்க மக்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், அரசு இதை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.


