News August 8, 2024
வங்கதேச நெருக்கடி.. பயன்படுத்துமா இந்தியா?

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். உலகின் முக்கிய ஆடை ஏற்றுமதியாளராக (மாதம் $3.8 பில்லியன்) அந்நாடு உள்ளது தெரிந்ததே. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள களோபரத்தல் அங்குள்ள பன்னாட்டு ஜவுளி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News December 4, 2025
ராமநாதபுரம்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக ராமநாதபுரத்தில் 173-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <
News December 4, 2025
தூர்தர்ஷன் தலைவர் ராஜினாமா!

தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை நிர்வகிக்கும், பிரசார் பாரதியின் தலைவராக இருந்த நவ்நீத் குமார் செகல், ராஜினாமா செய்துள்ளார். 4 ஆண்டுகளாக காலியாக இருந்த தலைவர் பதவியில், அவர் மார்ச், 2024-ல் பொறுப்பேற்றார். ஆனால், 2 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் பதவி விலகியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், அவரது ராஜினாமாவை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
News December 4, 2025
தமிழக தேர்தல்.. அறிவித்தது தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயுத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 முதல் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடனே தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள்.


